வேட்டி, சேலை தாமதம்; வெயிலில் மக்கள் காத்திருப்பு

Added : ஜன 10, 2020
Advertisement
 வேட்டி, சேலை தாமதம்; வெயிலில் மக்கள் காத்திருப்பு

வெள்ளகோவில்:வெள்ளகோவில் நகரில், 13 ரேஷன் கடைகள் உள்ளன; 12 ஆயிரத்து 485 ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. ஸ்மார்ட் கார்டுக்கான வேட்டி, சேலை, 11 ஆயிரத்து 695 மட்டுமே வந்திருந்தது.நேற்று காலை முதல் இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அதில், நத்தமேடு பகுதியிலுள்ள 5, 7ம் நம்பர் ரேசன் கடைகளில் வேட்டி, சேலை வருவதற்கு காலை, 11:00 மணி ஆனதால் பொதுமக்கள் பொங்கல் பரிசுடன் வேட்டி, சேலையையும் வாங்கிச் செல்லலாம் என பொறுமையாக வெயிலில் வரிசையாக காத்திருந்தனர். இதனால், ஏறத்தாழ, 3 மணி நேரம் பெண்களும், முதியோரும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
பல்லடம்
பல்லடம் வட்டாரத்தில், 80 முழு நேர, மற்றும் 54 பகுதி நேர ரேஷன் கடைகளில், 49,152 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, பொங்கல் இலவச வேட்டி, சேலைகள், ஒரு வாரத்துக்கு முன்பாகவே, பல்லடம் தாலுகா அலுவலகம் வந்தடைந்தன.நேற்று முதல் பொங்கல் பொருள் வினியோகம் துவங்க, கார்டுதாரர் ஒருவருக்கு, பொருட்கள் வழங்க, 10-15 நிமிடங்கள் ஆனதால், பொதுமக்கள் மணிக்கணக்கில் ரேஷன் கடைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, முதியோர் மிகவும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X