பனங்கிழங்கு சீசன் துவக்கம்: கட்டு ரூ.150க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனங்கிழங்கு சீசன் துவக்கம்: கட்டு ரூ.150க்கு விற்பனை

Added : ஜன 10, 2020
 பனங்கிழங்கு சீசன் துவக்கம்: கட்டு ரூ.150க்கு விற்பனை

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் தைப்பொங்கலை முன்னிட்டு பனங்கிழங்கு விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சிமலையடிவார பகுதி காடுகளில் விளைவித்த பனங்கிழங்குகள், கடந்த சில வாரங்களாக பஜார்வீதி ரோட்டோரகடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 25 கிழங்குகள் கொண்ட ஒருகட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

இதை கிராம மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். .ரேஷன் கடைகளில் பொங்கல்பரிசாக ரூ. ஆயிரம் வழங்கபட்டு வருவதால் பனங்கிழங்குகள், கரும்புகள் மற்றும் பொங்கல் சரக்குகள் விற்பனைசூடுபிடிக்கும் என வியாபாரிகளும், விவசாயிகளும் காத்திருக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X