ஆங்கிலத்தில் பொங்கல் வாழ்த்து; ஆர்வலர் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலத்தில் பொங்கல் வாழ்த்து; ஆர்வலர் வேதனை

Added : ஜன 10, 2020
Share
திருப்பூர்:பொங்கலுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழ் ஆர்வலர் மத்தியில் வேதனையில் ஆழ்த்தியது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு tnstc.in என்ற இணையதளம் செயல்படுகிறது. துறை சார்ந்த அறிவிப்பு, சிறப்பு பஸ், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் பொங்கல் சிறப்பு பஸ் விபரம் அறிவிக்கப்பட்டது. இதனால், இணையதளம் முகப்பு

திருப்பூர்:பொங்கலுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழ் ஆர்வலர் மத்தியில் வேதனையில் ஆழ்த்தியது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு tnstc.in என்ற இணையதளம் செயல்படுகிறது. துறை சார்ந்த அறிவிப்பு, சிறப்பு பஸ், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் பொங்கல் சிறப்பு பஸ் விபரம் அறிவிக்கப்பட்டது. இதனால், இணையதளம் முகப்பு பக்கம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி பஸ் புறப்படும் இடம், செல்லும் இடம், பயண தேதி, முன்பதிவு விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கம் இடதுபுறம் இடம் பெற்றுள்ளது. வலதுபுறம் 9 முதல், 14ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படும். பொங்கல் வாழ்த்து என, ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரம், தமிழில் வாழ்த்து தெரிவித்திருந்தால் வரவேற்றிருக்கலாம்,என ஆர்வலர்கள் வேதனைப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X