பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலயங்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி உட்பட மாவட்டத்திலுள்ள சிவாலயங்களில் இன்று, ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.மார்கழி மாதம் பவுர்ணமி நாளில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று விமரிசையாக நடக்க உள்ளது. நேற்று, பிச்சாண்டவர் கோலத்தில், சிவன் திருவீதியுலா சென்றார்.நேற்று மாலை, கோவில் வளாகத்தில், ஆருத்ரா வேள்வி பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, 32 வகையான திரவியங்களால் மகா அபிேஷகம் துவங்கும். அதிகாலை, 5:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவ விழா நடக்க உள்ளது.தொடர்ந்து, மணக்கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளும் ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மன், பட்டி விநாயகரை, 11 முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில்களிலும் இன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X