பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் குவா... குவா! தாயும், சேயும் நலம்

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு, பாறைக்குழியை சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவரது மனைவி உஷா. கர்ப்பிணியான அவருக்கு, நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸை கணவர் அழைத்தார்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்து விரைந்த ஆம்புலன்ஸ், அவரை அழைத்து கொண்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தை, டிரைவர் கார்த்திக் ஓட்டினார். பிரசவ வலியால் துடித்த உஷாவை, டெக்னீசியன் பாண்டியம்மாள் கவனித்து கொண்டார்.திடீரென ஆம்புலன்சிலேயே சுக பிரசவத்தில், பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இருவரையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்த டிரைவர், டெக்னீசியனை அனைவரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X