பொது செய்தி

இந்தியா

காவிரி நீர் ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு

Added : ஜன 10, 2020
Advertisement
 காவிரி நீர் ஒழுங்காற்று குழு காரைக்காலில் ஆய்வு

காரைக்கால்:காரைக்காலில், காவிரி் நீர் ஒழுங்காற்று குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடைமடை பகுதியான காரைக்காலுக்கு, ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி நீர் கிடைக்காததால், விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது.இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம், இன்று (10ம் தேதி) புதுச்சேரியில் நடக்கிறது. இதற்காக புதுச்சேரி வந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினர், காரைக்கால் பகுதியை பார்வையிட வந்தனர்.குழுவின் தலைவர் நவீன்குமார், செயலாளர் நீரஜ்குமார் உட்பட 16 பேர் கொண்ட குழுவினரை, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.மத்திய குழுவினர், தமிழக பகுதியில் இருந்து காரைக்காலுக்கு காவிரி நீர் வரும் வழி, நீரை அளவீடு செய்யும் முறை குறித்து, நல்லாத்துார், அன்னவாசல் பகுதிகளில் ஆய்வு செய்தனர். மதியம் 1.00 மணிக்கு துவங்கி, 2.00 மணிக்கு, ஆய்வை முடித்துக் கொண்டனர்.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினரை விவசாயிகள் சந்தித்து பேச, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மத்திய குழுவினர் மாலையில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.கார்கள் மோதல்: மத்திய குழுவினர், புதுச்சேரியில் இருந்து கார்கள் மூலம் காரைக்காலுக்கு வந்தனர். இந்த கார்கள், பூவம். நண்டலாறு பகுதியில் வரிசையாக சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு வாகனம் வந்தது.திடுக்கிட்ட கார் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால், அதிகாரிகள் சென்ற இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக அதிகாரிகள் காயமின்றி தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X