மன வளர்ச்சி குன்றியவருக்கு உதவித்தொகை குளறுபடி

Added : ஜன 10, 2020
Advertisement

பல்லடம்:மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு, உதவி தொகை சரியாக வராமல் சிரமப்படுகின்றார்.பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதுார் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நந்தகோபால்; கூலி தொழிலாளி. மனைவி பசுபதி. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள், 27, மன வளர்ச்சி குன்றியதன் காரணமாக, பெற்றோர், அவரை, வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகின்றனர்.அவருக்கு, 2009 முதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக, அத்தொகையில் குளறுபடி ஏற்பட்டு வருவதாக, பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது:2017ம் ஆண்டு முதல், உதவித்தொகை சரியாக வருவதில்லை. போதிய வருமானமும் இன்றி, மூன்று மகள்களை வைத்து கஷ்டப்பட்டு வருகிறோம். கலெக்டர் அலுவலகத்தில் கேட்டதற்கு, சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, உதவித்தொகை பெறுவது குளறுபடியாகவே இருந்து வருகிறது. எனவே, மகளுக்குரிய உதவித்தொகை தடையின்றி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X