பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணை தலைவர் தேர்வு எப்படி! தேர்தல் பிரிவு அதிகாரி விளக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:துணை தலைவர் தேர்தலில், ஊராட்சி தலைவர்கள் முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாதென, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தின், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நாளை (11ம் தேதி), மாவட்ட தலைவர், துணை தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு நடக்க உள்ளது. காலையில், மாவட்ட மற்றும் ஒன்றிய சேர்மன் தேர்வும், மதியம், துணை தலைவர் தேர்வும் நடக்கிறது.ஊராட்சி வார்டு உறுப்பினர்களில், யாராவது ஒருவர், துணை தலைவராக போட்டியிடலாம். இதுவரை இல்லாத அளவுக்கு, துணை தலைவர் தேர்தலில், ஊராட்சி தலைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது.முதல் நபராக, ஊராட்சி தலைவர் ஓட்டளிக்கலாம். அடுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஓட்டளிக்க வேண்டும். அதிக ஓட்டுகளை பெறும் வேட்பாளர், துணை தலைவராக அறிவிக்கப்படுவார். இரு வேட்பாளரும் சம ஓட்டுகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், ஊராட்சி தலைவர்கள், வேட்பாளரை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாதென, எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவினர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளிலும், 11ம் தேதி (நாளை) துணை தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. போட்டியில்லாத பட்சத்தில், ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்து, உரிய நேரம் கடந்ததும், துணை தலைவராக அறிவிக்கப்படுவார்.
போட்டி இருக்கும்பட்சத்தில், வேட்புமனுதாக்கல் செய்து, ஓட்டெடுப்பு நடத்தப்படும். மூத்த வார்டு உறுப்பினர் இருவர், துணைதலைவராக போட்டியிடும் உறுப்பினரை, ஒருவர் முன்மொழியவும், மற்றொருவர் வழிமொழியவும் வேண்டும்.இல்லாதபட்சத்தில், வேட்பாளராக போட்டியிட முடியாது; தலைவராக உள்ள நபர், துணை தலைவர் பதவிக்கான வேட்பாளரை, முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது. போட்டியிட்டு, அதிக ஓட்டுகளை பெறுபவர், துணை தலைவராக தேர்வாகி, தொடர்ந்து நடக்கும் கூட்டத்தில், முதல் தீர்மானமாக பதிவு செய்யப்படும். அதற்கான சான்றிதழ்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X