பொது செய்தி

இந்தியா

அரசு மருத்துவமனை அருகே 'அன்பு சுவர்'

Added : ஜன 10, 2020
Advertisement
 அரசு மருத்துவமனை அருகே 'அன்பு சுவர்'

புதுச்சேரி:அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள அன்பு சுவரை, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
'துாய்மை இந்தியா' இயக்கத்தின் கீழ், சுத்தத்தின் அடிப்படையில் நகரங்களை தர வரிசைப்படுத்தும் 'ஸ்வச் சர்வேக் ஷன் - 2020' போட்டியில் புதுச்சேரி நகராட்சியும் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில், அன்பு சுவர் அமைக்கும் திட்டமும் ஒரு அங்கமாக உள்ளது.வீட்டில் துணி உள்ளிட்ட பொருட்களை தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அவற்றை தேவைப்படுபவர்களிடம் எப்படி கொடுப்பது என தெரியாமல் குப்பையில் வீசுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், இருப்போர் கொடுக்கவும், தேவை உள்ளோர் பெறவும் அன்பு சுவரை பல்வேறு இடங்களில் புதுச்சேரி நகராட்சி அமைக்க உள்ளது.புதுச்சேரி நகராட்சியில் முதன்முறையாக, அரசு பொது மருத்துவமனை அருகில், நகராட்சியும், இந்திய தாய் மகளிர் நற்பணி மன்றமும் இணைந்து அன்பு சுவரை ஏற்படுத்தி உள்ளன. அன்பு சுவரை, முதல்வரின் பார்லிமெண்ட் செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் மலைவாசன், இந்திய தாய் மகளிர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X