பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வாங்க காத்திருந்த பொதுமக்கள்

Added : ஜன 10, 2020
Advertisement
  பொங்கல் பரிசு வாங்க காத்திருந்த பொதுமக்கள்

பொங்கலுார்:பொங்கலுார் கண்டியன் கோவிலில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது.கண்டியன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வரதராஜ் விழாவை துவக்கி வைத்தார். பயனாளிகளுக்கு இரண்டு அடி நீள கரும்பு, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முந்திரி 20 கிராம், திராட்சை, 20 கிராம், ஏலக்காய் ஐந்து கிராம், வேட்டி, சேலை மற்றும், 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியம், கூட்டுறவுவங்கி முன்னாள் தலைவர் கிட்டுசாமி, கண்டியன்கோவில் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர்கள் மூர்த்தி, பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல நாச்சிபாளையம், பொங்கலுார், பெருந்தொழுவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு பொருட்களை பெற்று சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X