பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பில் கோவை, திருப்பூர் தவிர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூடுதல் ரயில் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.வரும், 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை டிச., இறுதியில் தெற்கு ரயில்வே வெளியிட்ட நிலையில், கடைசி நேர நெரிசலை தவிர்க்க, கூடுதல் ரயில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.டிச., அறிவிப்பில் கோவையில் இருந்து சென்னை, மதுரை, நாகர்கோவிலுக்கு ரயில் அறிவிப்பு வெளியாகாததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வழக்கமான ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால், எப்படி சொந்த ஊர் செல்வது என்பது தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.ரயில் பயணிகள் கூறுகையில், 'சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிக்கு ஐந்து ரயில்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஒரு ரயில் கூட அறிவிப்பதில்லை. சென்னையில் வசிக்கும் அளவு தென்மாவட்டத்தினர் திருப்பூரிலும் உள்ளனர்.கோவையில் இருந்து ரயில் இயக்காமல், கேரளா மாநிலத்தின் கொல்லம், எர்ணாகுளத்தில் இருந்தே ரயில் பயணத்தை துவக்குவது வாடிக்கையாகி விட்டது. இதனால், எப்போது முன்பதிவு டிக்கெட், பொது பெட்டியில் இடம் கிடைப்பதில்லை. கடைசி நேர ரயில் அறிவிப்பும் இன்னும் வரவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X