நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: காங்., எம்.எல்.ஏ., தனவேலு பரபரப்பு பேச்சு

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: காங்., எம்.எல்.ஏ., தனவேலு பரபரப்பு பேச்சு

பாகூர்:'முதல்வர் நாராயணசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, ஆளும் காங்., கட்சியின் எம்.எல்.ஏ., தனவேலு கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் காங்., கட்சியின் எம்.எல்.ஏ., தனவேலு, நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பேரணியாக சென்று, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினார்.அப்போது, 'ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை; 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு டீசல் போட முடியவில்லை; மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர்' என குற்றச்சாட்டுகளை கூறியும், அரசை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பினர்.பின், தனவேலு எம்.எல்.ஏ., கூறியதாவது;புதுச்சேரி அரசு நிர்வாகம், கடந்த 3 ஆண்டுகளாக சீர்குலைந்து விட்டது. கவர்னர் மீது குற்றம் சுமத்தி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தப்பிக்க பார்ப்பதால், மாநில வளர்ச்சி தடைபட்டுள்ளது. காங். அரசு, கேவலமான அரசாக உள்ளது. ஆட்சியில் லஞ்சம், ஊழல், தலைவிரித்தாடுகிறது. இதை முதல்வரால் தடுக்க முடியாமல், உடந்தையாக உள்ளார்.ஆட்சி நடத்த முடியவில்லை என்றால், கொல்லைப்புறமாக முதல்வர் பதவிக்கு வந்த நாராயணசாமி, தானாக முன்வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏ.,க்களும் ஆளும் காங்., அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.முதல்வருக்கு எதிராக, ஆளும்கட்சி எம்.எல்.ஏ., வின் இந்த விமர்சனம், புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Chennai,இந்தியா
16-ஜன-202014:54:05 IST Report Abuse
KavikumarRam ///நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: காங்., எம்.எல்.ஏ., தனவேலு பரபரப்பு பேச்சு/// நாராயண சாமிக்கு இன்னும் ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது. ஒரு பதினைஞ்சு நாள் டைம் குடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
10-ஜன-202017:23:51 IST Report Abuse
Baskar பாருங்கள் புதுவைக்கு வந்த சோதனையை. கொல்லைப்புறமாக வந்த நாராயணசாமியை அவரது கட்சியை சேர்ந்தவரே ராஜினாமா செய்ய சொல்கிறார். இதை விட வெட்க கேடு வேறொன்றும் இல்லை இவருக்கு. இவர் கதை நாடெங்கும் நாறுகிறது. இப்போது தான் இவரது கூட்டணி தலைவரின் பந்தாவை பிடுங்கி விட்டனர். அடுத்து இவர் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X