பென்சில் வரைபட போட்டி :கல்லூரி மாணவியர் அசத்தல்

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பென்சில் வரைபடம் மற்றும் கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்று அசத்தினர்.திண்டல், வேளாளர் மகளிர் கல்லுாரியில் ராமானுஜர் தினவிழா பல்வேறு போட்டிகளுடன் நடந்தது. இதில் பல்வேறு அரசு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பென்சில் கொண்டு வரைபடம் வரைதல் மற்றும் கட்டுரை போட்டியில், காங்கயம் கல்லுாரியின் கணிதத்துறை மாணவியர் ரம்யபாரதி, நந்தினி, பிரேமா ஆகியோர் வெற்றிபெற்று அசத்தினர்.இவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தேவராஜூ மற்றும் கணிதத்துறை தலைவர் சீனிவாசன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X