பொது செய்தி

இந்தியா

மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி துவக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement
 மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி:பள்ளிக் கல்வித்துறை சார்பில், மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, ஜீவானந்தம் பள்ளியில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை, டில்லி அறிவியல் - தொழில்நுட்பத் துறை மற்றும் என்.ஐ.எப்., இந்தியா இணைந்து, மண்டல மற்றும் மாநில அளவிலான 'இன்ஸ்பயர் அவார்டு மானாக் - 2020' அறிவியல் கண்காட்சி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வழியாக சமர்ப்பித்தனர்.இதில், புதுச்சேரி - 71, காரைக்கால்-73, மாகி- 5, ஏனாம்- 8 மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. 157 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.இவற்றில் புதுச்சேரியைச் சேர்ந்த 71 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மண்டல அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மண்டல கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 அறிவியல் படைப்புகள் இடம்பெறும் மாநில அளவிலான கண்காட்சி இன்று (10ம் தேதி) நடக்கிறது.கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கு பெறும்.
கண்காட்சியை ஜான்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பார்வையிட்டார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, துணை இயக்குநர் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.கண்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் டொமினிக் ராயன், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சந்திரசேகரன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X