பொது செய்தி

தமிழ்நாடு

ஆடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு ரூ. 46 லட்சம் இழப்பீடு வழங்கல்

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், உலகளாவிய நாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். சில மாதங்களாக, ஜெர்மனியைச்சேர்ந்த பிரபல நிறுவனங்கள் திவாலாகி, தங்கள் சில்லரை ஆடை வர்த்தக ஷோரூம்களை மூடிவருகின்றன. திவாலாகும் வெளிநாட்டு நிறுவனங்களால், தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையை பெறமுடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவித்துவருகின்றன.இத்தகைய சூழலில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி காப்பீட்டு கழகம் (இ.சி.ஜி.சி.,) ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கிறது. திருப்பூர், பூலுவப்பட்டியில் இயங்கும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், ஜெர்மனி நாட்டு வர்த்தகருக்கு, ஆடை தயாரித்து, கடந்த 2018 டிச., மாதம் அனுப்பியுள்ளது.ஆடையை பெற்றுக்கொண்ட வர்த்தகர், அதற்கான தொகையை கடந்த 2019, மார்ச், ஏப்., மாதத்துக்குள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வழங்கவில்லை. தற்போது, அந்த வெளிநாட்டு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்டருக்கு திருப்பூர் ஏற்றுமதி நிறுவனம் இ.சி.ஜி.சி., காப்பீடு பெற்றிருந்தது. இதையடுத்து, ஆர்டருக்கான மொத்த மதிப்பில் 90 சதவீத தொகையான 46 லட்சம் ரூபாயை, ஏற்றுமதி நிறுவனத்துக்கு, இ.சி.ஜி.சி., வழங்கியுள்ளது.குமரன் ரோட்டில் உள்ள இ.சி.ஜி.சி., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கிளை மேலாளர் சுரேந்திர சோனி, ஆடை ஏற்றுமதி நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரியிடம் இழப்பீட்டு தொகையை வழங்கினார். ஆர்டர் வழங்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள், ஆடைகளை தயாரித்து பெற்ற பின்னரே அதற்கான தொகையை, உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X