பொது செய்தி

தமிழ்நாடு

நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு

Added : ஜன 10, 2020
Share
Advertisement

திருப்பூர்:நெய், வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் ஊத்துக்குளி பகுதிகளில் நெய், வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், 13 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. தரமான மூலப்பொருட்களை கொண்டு நெய், வெண்ணெய் தயாரிக்க வேண்டும்.தயாரிக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்; பணிபுரியும் பணியாளர்கள் தலைக்கவசம் உள்ளிட்டவை அணிய வேண்டும். மேலும், நெய் விற்பனை செய்யும் பாட்டிலின் மீது தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் கால அளவு, தெளிவான முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X