பொது செய்தி

இந்தியா

22ம் தேதி முதல் தொடர் போராட்டம் அமைச்சக ஊழியர்கள் அறிவிப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள அமைச்சக ஊழியர் பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக, அமைச்சக ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத்தலைவர் சேஷாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அமைச்சர் ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது.முதுநிலை கணக்கு அதிகாரி 40 இடங்களும், இளநிலை கணக்கு அதிகாரி -10, கண்காணிப்பாளர்- 121, அமைச்சக உதவியாளர்- 316, மேல்நிலை எழுத்தர் - 74, இளநிலை எழுத்தர் -51 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அமைச்சக ஊழியர்களுக்கு பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. அரசு திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.பி.சி.எஸ். பதவிகளில் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. 15 பி.சி.எஸ். பணியிடங்கள் பதவி உயர்வு இன்றி, அன்றாட பணிகளை கவனிக்கும் நிலையில் நிரப்பப் பட்டுள்ளது.ஆட்சியாளர்களுக்கும் கவர்னருக்கும் இடையே சுமூகம் இல்லாததால், பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்; மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உறவு சீராக இல்லாததால், புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய 7வது ஊதியக்குழு பரிந்துரை நிலுவை தொகை கிடைக்கவில்லை.புதுச்சேரியில் நிலவும் நிதி நெருக்கடியை தீர்க்க, புதுச்சேரி அரசு தனி கணக்கு ஆரம்பித்தபோது இருந்த ரூ. 2170 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் 22ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, அமைச்சக ஊழியர் கூட்ட மைப்பு தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X