பொது செய்தி

இந்தியா

பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல்

Added : ஜன 10, 2020
Advertisement

புதுச்சேரி:நிதி நெருக்கடி காரணமாக, புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ. 1000 ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.புதுச்சேரியில், ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என, முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என, தெரிகிறது.
இதனால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களை ஏமாற்ற விரும்பாத அரசு, பொங்கல் பொருட்களுக்கு பதில் ரூ.170, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளது.அத்துடன், 2 மாத இலவச அரிசிக்கு பதிலாக, மஞ்சள் கார்டுக்கு ரூ.600, சிவப்பு கார்டுதாரர்களுக்கு ரூ. 1,200 வழங்க முடிவு செய்துள்ளது.
இது தவிர, தாழ்த்தப்பட்டோர் மற்றும் மஞ்சள் நிற ரேஷன்கார்டு வைத்துள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச துணிக்கு பதிலாக, பணமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு 2 மாத அரிசிக்கு ரூ. 600, பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ. 170 சேர்த்து மொத்தம் ரூ. 770, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கான கோப்பு தயாராகி வருகிறது. பொங்கலுக்குள் இந்த தொகையை வழங்க அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X