பொது செய்தி

இந்தியா

தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020
Advertisement
 தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

புதுச்சேரி:புதுச்சேரியில், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'- 2020 மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, நேற்று கோலாகலமாக துவங்கியது.
'தினமலர்' நாளிதழ், புதுமையான, 'ஷாப்பிங்' அனுபவத்தை மக்களுக்கு வழங்க, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. புதுச்சேரியில், நேற்று துவங்கி, 13 வரையில் ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.புதுச்சேரியில் கடலுார் சாலை, கோர்ட் எதிரில் உள்ள, ஏ.எப்.டி., மைதானத்தில், நேற்று காலை, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' வை, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள, வீட்டு உபயோக பொருட்காட்சி அரங்குகளை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரும், ஆச்சாரியா கல்வி நிறுவன அரங்கை நலத்துறை அமைச்சர் கந்தசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் திறந்து வைத்தனர். , ஆட்டோ மொபைல்ஸ்' அரங்கை, அன்பழகன் எம்.எல்.ஏ., வும், உணவு அரங்கத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ.,வும் திறந்து வைத்தனர். விழாவில், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.கண்காட்சியில் முழுவதும், ஏசி' வசதி செய்யப்பட்ட, ஒரே கூரையின் கீழ், மூன்று பிரம்மாண்டமான அரங்குகளில் ஏராளமான ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. நுழைவு கட்டணம் 40 ரூபாய், தினமும் காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, கண்காட்சியில், "ஷாப்பிங்' செய்து மகிழலாம்.
கொட்டிக்கிடக்கும் புதுமைகள்

புதுச்சேரியில் நேற்று துவங்கிய 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2020' கண்காட்சியில், புதுமையான பொருட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அத்தனையும் இடம் பெற்றிருந்ததால், பொதுமக்கள் உற்சாகத்துடன் ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர்.
'தினமலர்' நாளிதழ், புதுமையான 'ஷாப்பிங்' அனுபவத்தை மக்களுக்கு வழங்க, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் கடலுார் சாலை கோர்ட் எதிரில் உள்ள, ஏ.எப்.டி., மைதானத்தில், தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' நேற்று கோலாகலமாக துவங்கியது. கண்காட்சி 13ம் தேதி வரையில் ஐந்து நாட்கள் நடக்கிறது. முதல் நாளிலேயே பொதுமக்கள் உற்சாகமாக ஷாப்பிங் செய்ய ஆர்வமுடன் வந்திருந்தனர்.'ஜில்லுனு' ஒரு ஷாப்பிங்முழுவதும் 'ஏசி' வசதி செய்யப்பட்ட ஒரே கூரையின் கீழ், வீட்டு உபயோகப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் என, மூன்று அம்சங்களும் இணைந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநில ஸ்டால்களும் கண்காட்சியில் அதிகம் இடம் பெற்றுள்ளன.முதல் நாளிலேயே கடலுார், விழப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து, குளு குளு அரங்கில், கரண்டி முதல் கார் வரையில் ஷாப்பி செய்து மகிழ்ந்தனர்.
கனவு இல்லம்
"கனவு இல்லம்' அரங்கத்தில், வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் சலுகை விலையில் விற்பனை, கண்கவர் தரை மற்றும் பாத்ரூம் டைல்ஸ் வகைகள், வீட்டின் உட்புறத்திற்கு மேலும் மெருகூட்டும் திரைச்சீலைகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட இன்டீரியர் டெக்கரேஷன் பொருட்கள், சமையலறைக்கு அழகூட்டும் சிம்னிகள், டிஷ் வாஷ் உள்ளிட்ட சாதனங்கள், அலங்கார விளக்குகள் என வீட்டுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.
ஆட்டோ மொபைல்ஸ்
கார் மற்றும் பைக் பிரியர்களைக் கவரும் வகையில், டாடா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் கார் வகைகள், பல்வேறு பிரபல நிறுவனங்களின் புது மாடல் இரு சக்கர வாகனங்கள் கண்காட்சியில் அணிவகுத்துள்ளன.
மங்கையருக்காக...
மங்கையரை கவரும் வகையில் பேன்சி பொருட்கள், காலணிகள், அழகு சாதனப் பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் இயற்கை உணவுகள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டிவி, கிரைண்டர், வாஷிங் மிஷின், படுக்கை விரிப்புகள், சமையல் சாதனங்கள், மெட்டல் பர்னிச்சர்கள், காப்டர் ரைடு, சூட்கேஸ் வடிவிலான பைக் ரைடு, வித விதமான டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருட்கள் மலையென குவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது.
குட்டீஸ்கள் குதுாகலம்
கண்காட்சிக்கு பெற்றோர்களுடன் வரும் குட்டீஸ்களை மகிழ்விக்க ஹெலிகாப்டர் ரைடு, கார் மற்றும் பைக் ரைடு, பெண்டுலம் விளையாட்டு, ஜம்பிங் பலுான், இரண்டு விதமான ரயில் பயணம், கார் ரேஸ், ஓட்டக சவாரி, வாட்டர் போட் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் குழந்தைகள் குதுாகலத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.
உணவு பிரியர்களுக்கு...
குடும்பத்துடன் ஷாப்பிங் முடித்து திரும்புபவர்கள் பசியாற, உணவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் உள்ளன. குறிப்பாக, சுவையால் சுண்டி இழுக்கும் திண்டுக்கல் வேணு பிரியாணி, மதுரை பன் புரோட்டா, பீசா, பர்கர், சாண்ட்விச், ஆந்திரா, கேரளா மற்றும் சைனீஸ் உணவு வகைகள், ஐஸ் கோலா, பான் பான் ஐஸ் கிரீம், குல்பி உள்ளிட்ட பல வகையான ஐஸ் கிரீம்கள், பிரஷ் ஜூஸ் வகைகள், போலி, பனியாரம், வகை வகையான தோசைகள், கடல் உணவு வகைகள், மோமோஸ், மதுரை ஜிகிர்தண்டா, பிரஷ் ஜூஸ் வகைகள், கே.எப்.சி., சிக்கன் உணவு வகைகள் என, உண்டு மகிழ வித விதமான உணவு வகைகளும் உண்டு.
'ருசி'யான குல்பி
கண்காட்சியில் 'ருசி' பால் நிறுவன ஸ்டால் அமைக்கப்பட்டு, நெய் மற்றும் பனீர் விற்பனை செய்யப்படுகிறது. உணவு அரங்கில், ருசி நிறுவனத்தின் தயாரிப்பான குல்பி, சாக்கோ பார், ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. ஐஸ்கிரீம் 'பேமிலி பேக்' அரை கிலோ வாங்கினால், அரை கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.காலையிலேயே வாங்க...
புதுமையான பொருட்கள், பொழுது போக்கு, குட்டீஸ்களை குஷிப்படுத்த விளையாட்டுகள் நிறைந்துள்ள ஷாப்பிங் திருவிழாவில், காலையில் வந்தால் கூட்ட நெரிசல் இல்லாமல் 'குளு குளு' அரங்குகளில் ரிலாக்சாக ஷாப்பிங் செய்யலாம். எனவே, குடும்பத்தோடு வாங்க... காலையிலேயே வாங்க...ஷாப்பிங் நேரம்கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் ரூ. 40. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 வரையில் கண்காட்சியில் ஷாப்பிங் செய்யலாம். மேலும், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


புதுமையான பொருட்கள்
தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' மூலம், புதுச்சேரியில் வியாபாரம் பெருகுவதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவை திறந்து வைத்த முதல்வர் நாராயணசாமி, ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று, பொருட்களின் விபரங்களை கேட்டறிந்தார். பார்வையாளர்களிடமும் அவர்கள் வாங்கிய பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், 'புதுச்சேரியில், தினமலர் சார்பில் 13 வது ஆண்டாக நடத்தப்படும் கண்காட்சியில், புதுமையான பொருட்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநில மக்களும் குறைந்த விலையி்ல் தேவையான பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இங்கு, வீட்டு உபயோகப்பொருட்கள், இரு சக்கர வாகனங்கள், கார் என, அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆச்சார்யா கல்லுாரி மாணவர்கள் சொந்த முயற்சியில் அரங்கம் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ள தினமலர் நிறுவனத்தாருக்கு எனது வாழ்த்துக்கள். கண்காட்சி நடத்துவதன் மூலம் புதுச்சேரியில் வியாபாரம் பெருகுவதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்கிறது' என்றார்.


விதவிதமாய்....வித்தியாசமாய்
மயக்கும் மரம்கொத்தி பறவைகண்காட்சியில் பார்வையோற்றோர் அரங்கில் மணல் மரங்கொத்தி பறவைகள் பொம்மைகள் 40 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் சிறிது தண்ணீர் நிரப்பி, ஊதினால் நீங்கள் மரம்கொத்தி பறவையாக ஒலி எழுப்பி அசத்துவீர்கள். குட்டீஸ்களுக்கு கிப்டாக கொடுத்து குஷிப்படுத்தலாம்.


வீடுகளுக்கு 'நண்பன்'
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி அரங்குகளில் ஏராளமான வீட்டுக்கு தேவையான பொருட்கள் திணறடிக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளன. வெளியில் கிடைக்காத விலையில் தள்ளுபடியும் இலவசங்களும் கிடைப்பதால் அத்தனை அரங்குகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.கண்காட்சியில் இல்லத்தரசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ள வீட்டு உபயோக பொருட்கள்.


மக்களுக்கு வரப்பிரசாதம்; தலைவர்கள் பாராட்டு

தினமலர் நாளிதழ் நடத்திவரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என, அரசியல் தலைவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
சிவகொழுந்து (சபாநாயகர்): புதுச்சேரியில் தினமலர் நாளிதழ் நடத்தும் கண்காட்சி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறைகொண்டு செய்தி சேவை புரிந்துவரும் தினமலர் நிறுவனம், பொதுமக்களுக்கு குறைந்த செலவில், அரிய வகை பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்காட்சியை நடத்துகிறது. இது ஆண்டு தோறும் தொடர வேண்டும். நாகரீக உலகிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே குடையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடு செய்த தினமலர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.
நமச்சிவாயம் (பொதுப்பணித்துறை அமைச்சர்): தினமலர் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சி, இந்த ஆண்டு மேலும் சிறப்பான முறையில் உள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழக மக்களும் இங்கு பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். பல்வேறு விதமான புதிய கண்டுபிடிப்புகள், புதிய பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு தேவையான பொருட்கள் அதிகம் கிடைக்கிறது. கண்காட்சி மூலம் புதுச்சேரி மக்கள் பெரிதும் பயனடைவர். இதேபோன்று ஆண்டு தோறும் கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்த வேண்டும்.
கந்தசாமி (நலத்துறை அமைச்சர்): ஒரே இடத்தில் சிறிய அளவிலான பொருட்கள் முதல் பெரிய அளவிலான பொருட்கள் வரையில் கிடைக்கிறது என்றால் தினமலர் கண்காட்சியில் மட்டுமே முடியும். நிறுவனங்களே நேரடியாக ஸ்டால்கள் அமைத்துள்ளதால், விலையும் நியாயமாக உள்ளது. இது, மக்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்கள், உணவு பொருட்கள் என, மகிழ்வான இடமாக கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்காக தினமலர் நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.
அன்பழகன் எம்.எல்.ஏ.,: புதுச்சேரியில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு தினமலர் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது. எனது உப்பளம் தொகுதியில் இந்த கண்காட்சி நடப்பது வரவேற்கதக்கது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான வீட்டு உபயோக பொருட்கள் விலை மலிவாகவும், இந்த கண்காட்சி மூலம், பல்வேறு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் சுற்றுலா வளர்ச்சி பெறும். கண்காட்சி ஆண்டு தோறும் தொடர வேண்டும்.
சாமிநாதன் எம்.எல்.ஏ.,: புதுச்சேரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தினமலர் கண்காட்சி, மக்களின் ஆவலை பூர்த்தி செய்துள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக கண்காட்சி அமைந்துள்ளது. குளு குளு வசதியுடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால். கண்காட்சியில் வெளிநாட்டில் ஷாப்பில் செய்யும் உணர்வு ஏற்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பொருட்களும் கிடைக்கிறது. வருமானம் மட்டுமே நோக்கமாக கருதாமல் பொது நோக்கத்துடன் கண்காட்சி நடத்தும் தினமலர் சேவை பாராட்டுக்குரியது.
செல்வகணபதி எம்.எல்.ஏ.,: தினமலர் கண்காட்சி தொடர்ந்து நடத்தி, மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான பொருட்கள், குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது பயனுள்ளதாக அமையும். தினமலர் நிறுவனத்தின் சேவை தொடர வேண்டும்.
சங்கர் எம்.எல்.ஏ.,: தினமலர் கண்காட்சியில் சாதாரண பொருட்கள் முதல் கார் வரையில் ஒரே இடத்தில் கிடைக்க செய்துள்ளனர். இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவன ஸ்டால்கள், திறன் மேம்பாடு மற்றும் மத்திய அரசின் திட்டங்களை தெளிவுப்படுத்தும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள் எதிர்பார்க்கும் வகையிலும், பயனுள்ள வகையிலும் நடத்தப்படும் கண்காட்சி தொடர வேண்டும்.


இனிமையான அனுபவம்; இல்லத்தரசிகள் புகழாரம்
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஸ்டால்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. பலவகையான பொருட்கள் இருப்பதால், எதை வாங்குவது, எதை தவிர்ப்பது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. இதுமாதிரி நேர்த்தியான கண்காட்சியை தற்போதுதான் பார்க்கிறேன். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளன. எல்லோருக்கும் ஏற்ற பொருட்கள் நிறைய உள்ளன.-காந்திமதி,திண்டிவனம்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X