பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ரேஷன் கடையில் திரண்ட மக்கள்

Added : ஜன 10, 2020
Advertisement

ராமநாதபுரம்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் பெண்கள், ஆண்கள் ரேஷன் கடைகளில் குவிந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 128 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். 558 முழு நேர ரேஷன் கடைகளும், 217 பகுதி நேர நியாய விலை கடைகள் என 775 கடைகள் செயல்படுகின்றன. அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

இதனால் காலை முதல் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விடுமுறை என்பதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஜன.,10, 11 ,12 வரை எந்தெந்த தெருக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது, என்ற அறிவிப்பு ரேஷன்கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு சரியாக
வழங்கவில்லை, என ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ரேஷன் கடைகள் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X