கனிமொழிக்கு மேலும் ஒரு வாரம் சிறை! 30ம் தேதி விசாரணை

Updated : மே 24, 2011 | Added : மே 23, 2011 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : 2ஜி வழக்கில் ஜாமின் கோரிய கனிமொழியின் மனு மீதான விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. "கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில், பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்,'' என, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் கனிமொழி ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டார். இதனால் மேலும் ஒரு வாரம் சிறையில் இருக்கும் நிலை கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளது.


"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்க மறுத்ததை எதிர்த்தும், அவர்களை ஜாமினில் விடுவிக்கக் கோரியும், டில்லி ஐகோர்ட்டில், பிரபல சட்ட நிபுணர்கள், துள்சி மற்றும் ஹரீஸ் சால்வே ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


கனிமொழி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. புனைந்துரைக்கப்பட்டவை. கனிமொழி சார்பிலான நியாயங்களை சரியாக அலசிப் பார்க்காமல், அவரது ஜாமின் மனுவை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துள்ளது. கனிமொழிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது தவறான செயல். அவர் தரப்பில் உள்ள நியாயங்களை சி.பி.ஐ., கோர்ட் கவனிக்கத் தவறி விட்டது.கனிமொழி மீது, துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, புனையப்பட்டவை. அவர், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர். முதுநிலை பட்டதாரி. ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற தகுதி நிலைகளை எல்லாம், சி.பி.ஐ., கோர்ட் கவனிக்கத் தவறி விட்டது.பாரபட்சமான வகையில் ஊடகங்கள் வெளியிட்ட புனைவுச் செய்திகளின் அடிப்படையில் தான், தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று கனிமொழி சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களையும் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை.ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதில், தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதை கனிமொழி விளக்கியிருக்கிறார்.


"கலைஞர், "டிவி'யில், தான், 20 சதவீத பங்குகள் வைத்துள்ள பங்குதாரர் மட்டுமே. அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் எந்த வகையிலும் பங்கெடுக்கவில்லை' என்பதையும் கனிமொழி கூறியுள்ளார்.மேலும், சினியுக் நிறுவனத்திடம் இருந்து, கலைஞர், "டிவி' பெற்ற, 200 கோடி ரூபாய் கடன் தொகைக்கும், இந்தத் தொகையை வரிப் பிடித்தம் போக வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதற்கும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த பரிவர்த்தனைகள், இரு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளன. இதில், எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. "2ஜி' விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, கனிமொழி கைது செய்யப்படவில்லை. அவர், சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோதும், சி.பி.ஐ.,யின் காவலில் எடுக்கப்படவில்லை. அதனால், கனிமொழிக்கு ஜாமின் மறுத்தது சரியல்ல.கோர்ட் சம்மனை ஏற்று வழக்கு விசாரணைக்கு கனிமொழி ஆஜராகியுள்ளார்.


கோர்ட்டில் அவரது கண்ணியமான நடவடிக்கையை நீதிபதியே பாராட்டியுள்ளார். கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். மேலும், ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில் பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்.கலைஞர், "டிவி'க்கு வழங்கப்பட்ட கடன் தொகை, லஞ்சப் பணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கடன்தொகையைப் பெற்றது மற்றும் திருப்பிச் செலுத்தியதற்கு முறையான ஆவணங்கள், ஏற்கனவே, தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, சாட்சியை கலைத்து விடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கனிமொழிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் மறுத்தது சட்டப்படி தவறான செயல்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாமின் மனு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.


- நமது டில்லி நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Citizen - chennai,இந்தியா
25-மே-201100:44:48 IST Report Abuse
Citizen Don't leave her out in bail. So far the DMK partymen were only corrupt and criminals. Now, Kanimozhi, and her cousins etc are all corrupt, and educated criminals. This is a very dangerous combination. No law in this world can convict educated criminals. Read about "Bernie Madoff" - he was part of a 20 billiion dollar scam, the US courts gave him 160 years imprisonment (non-bailable), he is in jail, and he is 70+ years old. 2G spectrum is a 40 billion dollar scam (1.75 lac crore rupees = 40 billion dollars)... Indian economy & sovereignity are not sustainable with these type of scandals... Ours is already a brittle economy given the rising gap between the rich and the poor. We need to enforce laws such that one will never again think of misusing ones office (whether it is taluk office, or PMO office)... What is to be done: First: All the courts should agree that this scam is a threat to country's economy and national security. Second: Chargesheet everyone involved to start with (irrespective of party, position, gender, social status, creed, color etc.) Third: Speed up the trial and convict those proven guilty - whoever it is. Fourth: Supreme court and the Army forces should come together to handle the consequences that may rise out of the verdict (yes, there will be crazy consequences when you see top faces arrested, so Army is very much needed to control the situation in the short term) Fifth: Install faith in people's minds on the Judicial system and wait a little while to see amazing results in our country's progress. It all looks like a dream - but Abdul Kalam had asked us to dream. First dream the ideal thing and then implement it.
Rate this:
Share this comment
Cancel
manmadan manmadan - Minneapolis,யூ.எஸ்.ஏ
25-மே-201100:17:33 IST Report Abuse
manmadan manmadan எம்மா கனிமொழி, உன்பிள்ளை, ராஜ்யசபா எம்.பி, கட்சி கொறடா வேலையெல்லாம் இருக்குனு ஜாமீன் கேக்கறது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, இந்த புத்தி பணத்தை கொள்ளை அடிச்சப்ப எங்கம்மா போச்சு.... ராஜ்யசபா எம்.பி, கொறடா பதவியை ராஜினாமா செய். தாதா (அய்யா கலைஞர்), பாட்டிமார்கள், அண்ணன்மார்கள் மற்றும் சொந்தங்கள் எல்லாம் சும்மா தான் இருக்காங்க வீட்ல, பிள்ளைய ஸ்கூல் அனுப்பற வேலை எல்லாம் அவங்க பாத்துப்பாங்க, நீங்க கொஞ்ச நாள் சிறைச்சாலையில் சந்தோசமா நிம்மதியா இருங்க.... சிறைல பொழுதுபோகலைனா "அம்மா" கிட்ட சொல்லுங்க அப்பா அண்ணன்களையும் துணைக்கு அனுப்பிவைப்பார். குடும்பத்தோட கும்மி அடிங்க திகார் சிறைல.
Rate this:
Share this comment
Cancel
Kumar KSK - Chennai,இந்தியா
25-மே-201100:15:27 IST Report Abuse
Kumar KSK 20 % பங்கு மட்டும் இருக்கிறதால் கைது பண்ண படாதா...? சரி அப்போ 60 % இருக்கிறவங்கள உள்ள தூக்கி வைங்க......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X