பொது செய்தி

இந்தியா

லோக்பால் மசோதா தயாரிப்பு மும்முரம் :பேச்சில் முதல்கட்ட உடன்பாடு

Updated : மே 24, 2011 | Added : மே 23, 2011 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மசோதா தொடர்பான அடிப்படையான விஷயங்களில் அரசு தரப்பினருக்கும், சமூக பிரதிநிதிகள் தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மசோதா தொடர்பாக அடிக்கடி சந்தித்துப் பேசவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நாட்டில் ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை உருவாக்க, சமூக சேவகர் அன்னா ஹசாரே உட்பட ஐந்து பேர் அடங்கிய சமூக பிரதிநிதிகள் குழுவையும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் அடங்கிய குழுவையும், மத்திய அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவினரின் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது.


மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:லோக்பால் வரைவு மசோதா ஜூன் 30ம் தேதிக்குள் தயாராகி விடும். பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடரில் அது அறிமுகப்படுத்தப்படும். அன்னா ஹசாரே தலைமையிலான சமூக பிரதிநிதிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவினர், கூட்டத்தில் தெரிவித்த 40க்கும் மேற்பட்ட அம்சங்களில், பாதிக்கும் மேற்பட்டவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ளவை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும். லோக்பால் வரைவு மசோதா குழுவின் கூட்டம், வரும் 30ம் தேதி மீண்டும் நடைபெறும்.நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் பிரதமரை, லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படவில்லை. அடுத்த கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்கப்படும். லோக்பால் அமைப்பு, அரசின் தலையீடற்ற, தனி அதிகார அமைப்பாக செயல்பட வேண்டும், பொது ஊழியர்களுக்கு எதிரான எந்த விதமான ஊழலையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு இருக்க வேண்டும் என்பது உட்பட, அடிப்படையான பல விஷயங்களில் வரைவு மசோதா குழுவினரிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.


வரைவு மசோதா குழுவில், சமூக பிரதிநிதிகள் தரப்பில் இடம்பெற்றுள்ள பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் கூறுகையில், ""சமூக பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பல யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேறு சில யோசனைகள் அரசு தரப்பு பிரதிநிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தாலும், இறுதி முடிவு காண, மேலும் பல முறை ஆலோசனை நடத்தப்படும்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
24-மே-201121:17:33 IST Report Abuse
rajan எல்லாம் சரிதான் ஐயா, அண்ணன் சிதம்பரத்த நல்ல பாத்துகோங்க. இடைல புகுந்து இந்த மசோதாவ புஸ்ஸுன்னு ஆகிடபோறான். உங்களுக்கு அவர பத்தி தெரியுமோ என்னவோ மக்களுக்கு நல்ல தெரிந்ததல தான் இந்த தேர்தல்ல நல்ல மூடை கட்டிட்டாங்க. போதாகுறைக்கு இப்போ தான் சர்க்காரிய டாக்டர சந்திசிருக்காரு. அவரு நல்ல ஐடியா கொடுத்திருப்பாரு. என்னவோ நீங்க கொண்டுவர்ற மசோதா நம்ம தேர்தல் கமிசன் மாதிரி மக்களுக்கு தொண்டதவேணும் வரும் தலைமுறைக்கு. தயவு செய்து இதை மறந்துவிடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
24-மே-201118:27:05 IST Report Abuse
rajan எல்லாம் சரிதாங்க ஐயா. இந்த அண்ணன் சிதம்பரத்த நல்ல பாத்துகோங்க. இடைல புகுந்து சட்டத புஸ்ஸுன்னு ஆக்கிடுவரு. உங்களுக்கு அவர பத்தி தெரிமோ என்னவோ ஆனா மக்களுக்கு அவர பத்தி நல்லாவே தெரியும். இபோதான் சர்க்காரியா டாக்டர வேற சந்திசிருக்காரு. இந்த மசோதா எலக்சன் கமிசன் மாதிரி செயல் படணும் வரும் தலைமுறைக்கு. நல்ல போதுகோங்க.
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
24-மே-201102:32:31 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN லோக் பால் மசோதா, மக்களுக்கு பால் வார்த்தால் சரி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X