நிதியமைச்சர் எங்கே? : காங்., கேள்வி

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (113)
Advertisement

புதுடில்லி ; பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது.





பிப்.,1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தும் இலக்கை எட்டுவது தொடர்பாக 40 பொருளாதார நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், வங்கியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று (ஜன.,10) ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை. அதே சமயம் பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்.





பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., கேள்வி எழுப்பி உள்ளது. காங்., தனது டுவிட்டர் பக்கத்தில், #FindingNirmala என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி அத்துடன், அடுத்த ஆலோசனை கூட்டத்திற்காவது நிதியமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என கேட்டுள்ளது. மற்றொரு டுவீட்டில், பிரதமரின் ஆலோசனை கூட்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுகிறார்கள் என கேட்டுள்ளது. காங்., எம்.பி., சசிதரூர், நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன தான் நடக்கிறது என கேட்டுள்ளார்.





காங்.,ன் இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சகம், நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ., தரப்பில் பதிலளிக்கப்பட்டும் காங்., தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், டிச.,20 ம் தேதி ஏற்கனவே பொருளாதார நிபுணர்களை நிதியமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டார். அதன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., நிர்வாகிகள் உடனான கூட்டமும், பொருளாதார ஆலோசனை கூட்டமும் ஒரே நாளில் நடைபெற்றதால், பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் தான் பங்கேற்காதது குறித்து பிரதமருக்கு முன்கூட்டியே நிர்மலா தகவல் அனுப்பி விட்டதாகவும், பிரதமர் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் நிர்மலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
11-ஜன-202005:18:39 IST Report Abuse
Anandan இவங்க பேச்சை பாருங்க. முதலில் ஜெட்லீ பெரிய மேதை அப்படினு சொன்னாங்க, பசி, மன்மோகன் சிங்கெல்லாம் சும்மா எங்க ஆளு கெத்துனு சொன்னாங்க. கொஞ்ச நாள் முன்னாடி பொருளாதாரம் பாழாய் போக அவர்தான் காரணம் ஏன்னா காங்கிரஸ் கையால் அப்படினு புலம்பல். அப்புறம் நிர்மலா சீதாராமன் பெரிய பொருளாதார நிபுணர் அப்படினு சொன்னாங்க இப்போ அவர் தலைமறைவு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க, பொருளாதார சீரழிவிற்கு நிர்மலா சீதாராமன் காரணம்னு அடிப்பொடிகள் சொல்ல ஆரம்பிப்பாங்க. இவங்களுக்கு யாரையாவது குறை சொல்லி காலத்தை ஓட்டணும். இந்த ஆட்சியில் யாரும் அவர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாது தனிமனித துதித்தான் மேலோங்கியுள்ளது. இதுல அடிப்பொடிகள் காங்கிரசையும், திமுகவையும் வசைபாடுதுகள்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-ஜன-202022:01:12 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN காங்கிரஸ் கட்சிக்கு சிதம்பரம் மட்டும் தான் நிதி அமைச்சர் தெரியும். ஆனால் பா ஜ. க .வில் எல்லோரும் நிதி அமைச்சர் பணியை செய்வர் என்பதை ராகுலுக்கு தெரிவிக்கலாம். நிதி கைதியாக உலா வருகிறது. தலைகுனிவு தன் முதுகில் இருப்பதை பார்க்க முடியாதுதான். ஏதோ பாவம் எத்தனை கோடி செலவிட்டு வெளியில் வந்துள்ளாரோ எல்லாம் வல்ல இறைவனுக்கே தெரியும்.அவர் மனசாட்சிக்கு பயப்படவில்லை இருந்தால் மௌனம் காப்பார் நிரபராதி என வந்துவிட்டு வீர வசனம் பேசலாம் அதை விட்டு ..............
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
11-ஜன-202005:14:36 IST Report Abuse
Anandanஅண்ணாத்தே, தூக்கத்தில் இருந்து எழுங்க. பொருளாதாரம்னா என்னன்னே இவங்களுக்கு இன்னும் புடிபடலை இதுல நீங்க வேற சொம்பை தூக்கிகிட்டு வந்துடுறீங்க....
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
10-ஜன-202019:47:00 IST Report Abuse
Kannan அது சரி உங்க நிதி அமைச்சர் ஒன்னு நம்பர் பிராடு ப சி சோனியா வீட்டில் தான் பட்ஜெட் தயாரித்தபொது, நம்ம மௌனி பாபா என்ன செய்தார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X