பொது செய்தி

இந்தியா

சிமென்ட் தரை கறையை சுத்தப்படுத்த புது- லைசால்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: உலகில் நுகர்வோர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, 'ரெக்கிட் பென்கிசர்' நிறுவனம், வீடுகளை சுத்தம் செய்ய, 'லைசால்' என்ற பிராண்டை விற்பனை செய்கிறது.இல்லத்தரசிகள் சிரமம் அந்நிறுவனம், சிமென்ட் தரையில் உள்ள கறைகளை முற்றிலுமாக அகற்ற, புதிய, 'லைசால் சிமென்ட் சர்பேஸ் கிளீனர்' அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து,

சென்னை: உலகில் நுகர்வோர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, 'ரெக்கிட் பென்கிசர்' நிறுவனம், வீடுகளை சுத்தம் செய்ய, 'லைசால்' என்ற பிராண்டை விற்பனை செய்கிறது.



latest tamil news


இந்தியாவில் மூன்றில் ஒரு வீட்டில் இன்னமும் சிமென்ட் தரைதான் உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இப்போதும் சிமென்ட் தரையை விரும்புவதுதான் இதற்குக் காரணம். சிமென்ட் தரையில் வேதிமாற்றத்தால் வெள்ளைத்திட்டுகள் ஏற்படுகிறது. பினாயில் மற்றும் டிடர்ஜென்ட்களை போட்டு கழுவினாலும் அந்த கறை போகாது. மீண்டும் வெள்ளைத்திட்டுகள் வந்துவிடும். இந்தப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண லைசால் சிமென்ட் ஃப்ளோர் கிளீனரை RB நிறுவனம் தயாரித்துள்ளது.



இல்லத்தரசிகள் சிரமம்


அந்நிறுவனம், சிமென்ட் தரையில் உள்ள கறைகளை முற்றிலுமாக அகற்ற, புதிய, 'லைசால் சிமென்ட் சர்பேஸ் கிளீனர்' அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, சென்னையில், ரெக்கிட் பென்கிசர் ஹைஜின் ஹோம் தெற்காசியா நிறுவனத்தின், சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரியும், சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனருமான, சுக்லீன் அனேஜா நேற்று கூறியதாவது:
இந்தியாவில், மூன்று வீடுகளில் ஒன்றில், சிமென்ட் தரை உள்ளது. தமிழகத்தில், மூன்றில் இரண்டு வீடுகளில், சிமென்ட் தரை உள்ளது.
'கால்சியம் ஹைட்ராக்சைடால்' ஆன சிமென்ட் தரை, காற்றில் உள்ள, கார்பன் - டை - ஆக்சைடு உடன் சேர்ந்து, வெள்ளை நிறத்தில் காணப்படும், 'கால்சியம் கார்பனேட்' என்ற உப்பை உருவாக்குகிறது. இந்த உப்பின் எச்சங்கள், சிமென்ட் தரைகளில், வெள்ளை கறையை ஏற்படுத்துகின்றன. சிமென்ட் தரையில் உள்ள கறைகள் மற்றும் வெள்ளை கறையை அகற்ற, இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். அவர்கள், கறைகளை அகற்ற, சோப்புகளை பயன்படுத்துவதால், தரைகள் பாழாகின்றன.


உலகில் முதல் முறை



latest tamil news



நடப்பாண்டில், கூடுதலாக, 18 கோடிக்கும் அதிகமான வீடுகள், சிமென்ட் தரையை கொண்டிருக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தென் மாநிலங்களில் மட்டும், 33 சதவீத வீடுகள் இருக்கும். 'தூய்மையான உலகத்தை உருவாக்குங்கள்' என்ற எங்கள் நோக்கத்தை மேம்படுத்த, உலகில், முதல் முறையாக, சிமென்ட் தரையில் உள்ள கறைகளை அகற்ற, 'லைசால் சிமென்ட் தரை கிளீனர்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது, இந்தியாவில், அதிக சிமென்ட் தரைகள் உடைய, தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் கிடைக்கும். லைசால் சிமென்ட் தரை கிளீனரில், தரையை துடைக்கும் போது, கிருமிகளை முற்றிலுமாக நீக்க முடியும். தரைகளில் பாதிப்பு ஏற்படாது. 'பைன்' மற்றும் எலுமிச்சை வாசனைகளில் உள்ள லைசால் சிமென்ட் தரை கிளீனர், 100 மி.லி., பாக்கெட், 25 ரூபாய்க்கும்; 400 மி.லி., பாட்டில், 74 ரூபாய்க்கும் கிடைக்கும்.
தமிழகத்தில், மூன்று வீடுகளில், இரண்டில், லைசால் சிமென்ட் கிளீனரை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-202015:13:14 IST Report Abuse
தமிழவேல் நல்ல விளம்பரம்... இதுவும் வேதிப்பொருள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
10-ஜன-202013:28:35 IST Report Abuse
G.BABU .....இதை பயன்படுத்துபவர்கள் இதில் இருக்கும் ரசாயன தன்மையின் வீரியத்தையும் கவனத்தில் கொள்வது சிறந்தது. பாதங்களுக்கு பங்கம் ஏற்படாதவரையில் இருந்தால் பரவாயில்லை.
Rate this:
Cancel
kurumban - kumbakonam,இந்தியா
10-ஜன-202013:13:02 IST Report Abuse
kurumban Nice Product
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X