பொது செய்தி

இந்தியா

விமான பயணிகள் எண்ணிக்கை 11 ஆண்டில் இல்லாத சரிவு

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (23)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : 2008 ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக 2019 ம் ஆண்டில் டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.





2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ம் ஆண்டில் டில்லிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.




பிஸியான விமானநிலையங்கள் என வர்ணிக்கப்படும் டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் வரை குறைந்துள்ளது. 2018 ல் டில்லி விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 5.1 கோடியாகவும், சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 1.8 கோடியாகவும் இருந்தது. இது 2019 ல் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 4.9 கோடியாக குறைந்துள்ளது; வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 1.9 கோடியாக அதிகரித்துள்ளது.





இதே போன்று மும்பை விமான நிலையத்தில் 2018 ல் 3.5 கோடியாக இருந்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 2019 ல் 3.4 கோடியாக குறைந்துள்ளது. 2018 ல் 1.4 கோடியாக இருந்த சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 2019 ல் 1.3 கோடியாக குறைந்துள்ளது. சில விமான நிறுவனங்களில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு, தாமதமான இயக்கம், பாக்., வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் 138 நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது போன்ற காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-202017:39:38 IST Report Abuse
தமிழ்வேல் செய்தியில் ஆரம்பத்தில் பொருளாதார மந்த நிலையே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. எப்போதும்போல கடைசியில் மங்களம் பாடும்போது பிரச்சனைகள் பூசி மெழுகப்படுகின்றன..
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
10-ஜன-202017:23:49 IST Report Abuse
Madhav விமான நிலைய பராமரிப்பு பூராம் அதானி கிட்ட விமான கட்டணம் அதிகமாக இது ஒரு முக்கிய காரணம். மற்ற படி எரிபொருள் விலை குறைவாக உள்ள நேரத்தில் - கச்சா எண்ணெய் விலை உலக அளவில் குறைந்துள்ளது - வேறு காரணங்கள் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-202017:06:20 IST Report Abuse
ஆப்பு நமது பிரதமரும், ஜனாதிபதி யும், மத்த புள்ளிகளும் பறந்து பறந்து போயுமா விமான பயணம் குறைந்து போச்சு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X