பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன்: கமல் புகழாரம்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (57)
Advertisement
Kamalhaasan, Rajinikanth, Rajini, Kamal, ரஜினி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கமல்,

இந்த செய்தியை கேட்க

சென்னை : எங்கோ பிறந்திருந்தாலும் இப்போது பெருமை மிகு தமிழனாக நண்பர் ரஜினிகாந்த் திகழ்கிறார் என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணித்தை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். ரஜினி எப்படியும் அரசியலுக்கு வந்தே தீருவேன் என கூறி வருகிறார். சமகாலத்து நடிகர்களான இருவரும், சமீபமாக அரசியலிலும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இருவரும் இணைந்து பயணிக்கும் திட்டத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் காலில் செய்த ஆபரேஷனால் ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் அரசியல் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.





கமல் பேசுகையில், காலத்தின் தேவையாக இருந்த திராவிட அரசியல் இன்று தனிநபர்களின் தேவையாக மாறிவிட்டது. திராவிட அரசியலை சரியான பாதையில் எடுத்து செல்ல வேண்டும். ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்தது. இப்போது அவர் தமிழகத்திற்கு உதவ வேண்டும். வேறு எங்கோ பிறந்திருந்தாலும் அவரும் இப்போது பெருமை மிகு தமிழர் ஆகிவிட்டார் என்றார்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமலிடம், விமான நிலையத்தில் ரஜினி குறித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல், ‛‛தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை, பணம் படைத்தவர்கள் முதலீட்டை செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் பொதுவாக சொன்னது. ரஜினிக்கும் இது பொருந்தும். அந்த கடமை அவருக்கும் உள்ளது'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலை கான் - gopalgardenpet,இந்தியா
11-ஜன-202019:02:26 IST Report Abuse
சுடலை கான் ஒரு ஆபரேஷன் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜன-202017:09:53 IST Report Abuse
இந்தியன் kumar மொழியால் இனத்தால் ஜாதியால் மதத்தால் இந்திய மக்களை பிரிக்க கூடாது , நல்லவர்களை ஆதரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மலைக்கள்ளன் - கடமலைக்குண்டு,இந்தியா
11-ஜன-202016:35:53 IST Report Abuse
மலைக்கள்ளன்  வைணவம் தந்த அரிய பிறப்பினை சாக்கடையில் எறிந்து நெற்றில் திருமண் சாற்றும் அருமை புரியாமல் புலால் உண்டு பல மறுமணங்கள் புரிந்து கலாச்சாரம் தொலைத்து எதற்காகவோ மதமாற்றம் செய்த அரிய தலைவரே . நீங்கள் தலை க்கீழாக நின்று தண்ணி குடியுங்கள் . ரஜினி ஒட்டு உங்களுக்கு இல்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X