தமிழ்நாடு

மின் தடையால் பொங்கல் பரிசு பாதிப்பு: ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பல்

Added : ஜன 10, 2020
Advertisement

கரூர்: மின் தடை காரணமாக, சில பகுதிகளில் பொங்கல் பரிசு கொடுக்க முடியாமல், பாதிப்பு ஏற்பட்டதால், ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பினர்.
கரூர் மாவட்டத்தில், 583 ரேஷன் கடைகளில் உள்ள, இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து, 415 அரிசி வாங்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகை, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த, 5 ல் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நேற்று முதல், 13 வரையிலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்படும். இதில், நேற்று தான்தோன்றிமலை, வெள்ளியணை துணை மின் நிலையங்களில் மின் தடை காரணமாக, பொங்கல் பரிசு வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் திணறினர்.

இது குறித்து, கடை ஊழியர்கள் கூறியதாவது: நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விபர பட்டியல், கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், தான்தோன்றிமலை, வெள்ளியணை துணை மின் நிலையங்களில் மின் தடை என பத்திரிக்கைகள் மூலம் தெரிந்தது. ஆனாலும், மின்னணு இயந்திரங்களில் சார்ஜ் போடாமல் இருந்து விட்டனர். முழுவதும் சார்ஜ் இருந்தால் கூட, இரண்டு முதல், நான்கு மணி நேரம் மட்டுமே நிற்கும் என்பதால், பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சில கடைகளுக்கு ஆளும் கட்சி நிர்வாகிகள், ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மற்ற இடங்களில், இயந்திரத்தில் சார்ஜ் இருந்த வரை கொடுக்க முடிந்தது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X