இந்த செய்தியை கேட்க
சென்னை: கன்னியாகுமரி சோதனைச்சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ., வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு, சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) வில்சன், நேற்று முன்தினம் (ஜன.,08) இரவு பணியில் இருந்தார். அப்போது, மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த இரு மர்ம நபர்கள், வில்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். வில்சன் உடலில் 2 புல்லட்கள் பாய்ந்ததில் அங்கேயே உயிரிழந்தார். தப்பியோடியவர்களை தமிழக மற்றும் கேரள போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இரு குற்றவாளிகளின் புகைப்படங்களையும் கேரள போலீஸ் வெளியிட்டது.

நிவாரணம்:
உயிரிழந்த வில்சன் குடும்பத்தார்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE