பொது செய்தி

இந்தியா

ஜேஎன்யு கலவரம்: மாணவர் சங்க தலைவிக்கு தொடர்பு: போலீஸ்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த கலவரத்தில், அப்பல்கலை மாணவர் சங்க தலைவி ஆயிஷே கோஷ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ஜேஎன்யு வளாகத்தில் கடந்த ஜன., 5 (ஞாயிற்றுக் கிழமை) இரவில் முகமூடி அணிந்து வந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
DelhiPolice, JNUSU,  AisheGhosh, Left, JNU, campus, ஜேஎன்யு, பல்கலை, கலவரம், மாணவர்சங்கம், போலீஸ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த கலவரத்தில், அப்பல்கலை மாணவர் சங்க தலைவி ஆயிஷே கோஷ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜேஎன்யு வளாகத்தில் கடந்த ஜன., 5 (ஞாயிற்றுக் கிழமை) இரவில் முகமூடி அணிந்து வந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டில்லி போலீஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.


latest tamil news
பொய் தகவல்


டில்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ரந்த்வாணா கூறியதாவது: ஜேஎன்யுவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.


latest tamil newsவிசாரணை தொடரும்


டில்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜாய் திர்கி கூறுகையில், கலவரம் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஜன., 1 முதல் 5 வரை ., மாணவர்கள் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு, பெரும்பாலான மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மாணவர் சங்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலான மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களை விரைவில் பிடித்து விசாரணை நடத்துவோம். கலவரத்தில் ஈடுபட்ட சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

கலவரம் தொடர்பாக பரவிய வீடியோ மற்றும் விசாரணை அடிப்படையில் அவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, கலவரத்தில் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்துவோம். மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ், வஷ்கர் விஜய் விகாஸ் படேல் சுசுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, வஷ்கர் விஜய், சுசிதா தலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சவந்த், யோகேந்திரா பரத்வாஜ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கத்தினருக்கு கலவரத்தில் பங்கு உள்ளது. கலவரத்திற்கு முந்தைய நாள், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் சர்வர் அறை அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், சிசிடிவி காட்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
மறுப்பு

இது தொடர்பாக ஆயிஷே கோஷ் கூறுகையில், போலீசார் அவர்களின் பணியை தொடரலாம். நான் எப்படி தாக்கப்பட்டேன் என்பது பற்றி என்னாலும் ஆதாரம் காட்ட முடியும். துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அவரால், பல்கலையை சுதந்திரமாக இயக்க முடியவில்லை. பல்கலையை சுமூகமாக இயக்கக்கூடிய நபரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு மீதும், விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும். ஆனால், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவது ஏன்? எனது புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. நான் எந்த தாக்குதலிலும் ஈடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
11-ஜன-202019:14:48 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி அந்த கம்யூனிஸ்ட் சங்க மாணவி முதல் நாள் வலது கையில் கட்டும் அடுத்த நாள் இடது கையில் கட்டும் போட்டிருக்கிறார். வன்முறையில் ஈடுபட்ட இவர்கள் காவல்துறையைக் ஏமாற்ற அடிபட்டதுபோல வேஷம் போடுகின்றனர்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஜன-202013:56:42 IST Report Abuse
S.Baliah Seer ஹிந்து ரக்க்ஷ தளம் என்ற அமைப்பு மாணவர்களை அடித்து நொறுக்கியது தாங்கள் தான் என்று பொறுப்பு ஏற்ற பின்னரும் JNU கலவரத்திற்கு மாணவர் தலைவி ஆயிஷே கோஷ் காரணம் என்று போலீஸ் கூறுவது பொய் என்று தெளிவாகத் தெரிகிறது.வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். இந்தியாவில் அது அதிகம். அப்படியிருக்க எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்பது சர்வாதிகாரப்போக்கு இல்லையா?
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
12-ஜன-202010:22:38 IST Report Abuse
sankarஅது எல்லாம் கம்யூனிச ரௌடிகள்...
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஜன-202010:56:09 IST Report Abuse
Cheran Perumal காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மூர்கத்தினர் ஆதரவு நீதிபதிகள் இருக்கும்வரை இவர்களை யாரும் தொடக்கூட முடியாது. என்ன திமிராக பேசுகிறாள் பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X