காஷ்மீரில் கட்டுப்பாடுகள் மறு ஆய்வு ; சுப்ரீம்கோர்ட் உத்தரவு

Added : ஜன 10, 2020
Share
Advertisement
புதுடில்லி : ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதனையொட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளும் மாநிலத்தில் விதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெகபூபா முப்தி,

புதுடில்லி : ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதனையொட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளும் மாநிலத்தில் விதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா ஆகிய தலைவர்களும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். மற்ற மாநில அரசியல் பிரதிநிதிகளும் காஷ்மீரில் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல பிரச்னைகளை தடுக்கும் விதமாக இணைய சேவையும் முடக்கப்பட்டது. அதிகபட்சமாக காஷ்மீரில் கடந்த ஆண்டு அதிக நேரம் இன்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டதால் மட்டும் 2019 ல் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் மற்றும் பத்திரிகை ஆசிரியா் அனுராதா பாசின் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம்கோர்ட்டில் இன்று (ஜன., 10) நீதிபதிகள் என்.வி.ரமணா, ஊ்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில்,


latest tamil news



அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ், இணைய சேவை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை. ஜனநாயகத்தில் பேச்சுரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போல, இணையதளத்தின் மூலம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பதும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக உள்ளது. ஆகவே காஷ்மீரில் இணையச் சேவை முடக்கம் உள்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் ஒரு வாரத்துக்குள் மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு காஷ்மீர் நிர்வாகத்திற்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


latest tamil news



உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காஷ்மீர் மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X