சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சிதம்பரத்தைப் பத்தி பேசலேன்னா தூக்கம் வராதோ!'

Added : ஜன 10, 2020
Share
Advertisement
'சிதம்பரத்தைப் பத்தி பேசலேன்னா தூக்கம் வராதோ!'

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜ், சிதம்பரத்திற்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம், அவர், 'தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்த, தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. த.மா.கா., குறுகிய காலத்தில், தேர்தலில் போட்டியிட்டு, 75 சதவீத வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்.

'தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கூடாது. முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் திஹாருக்கு சென்று வந்த பின் மாறி விட்டார். அவர், சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறி மாறி பேசி வருகிறார்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'ப.சிதம்பரத்தைத் தாக்கிப் பேசலேன்னா, யுவராஜுக்கு துாக்கம் வராது போலிருக்கு...' என 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள் சிரித்தபடி கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X