சந்தா கோச்சார் சொத்துக்கள் முடக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement
 சந்தா கோச்சார் சொத்துக்கள் முடக்கம்

புதுடில்லி: பணமோசடி வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சந்தா கோச்சாரின் சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.ஐ.

சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோருக்கு, சட்டவிரோதமாக 1,875 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியதாகவும், அதற்குப் பயனாக, அவருடைய கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனம், ஆதாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கை, சி.பி.ஐ.,யும் அமலாக்கத்துறையும், விசாரித்து வருகின்றன. கடந்த வருடம், சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் மீது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், கிரிமினல் வழக்கை, பதிவு செய்தது அமலாக்கத்துறை.இந்நிலையில், சந்தா கோச்சாரின், 78 கோடி ரூபாய் மதிப்பிலான, மும்பையில் உள்ள வீடு உள்ளிட்ட சொத்துக்களை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. சந்தா கோச்சார் மீது, சி.பி.ஐ., பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X