ஐகோர்ட்டில் பேராசிரியர்கள் முறையீடு

Added : ஜன 10, 2020
Advertisement

புதுடில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான, ஆதாரங்களை மீட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி, பல்கலை பேராசிரியர்கள் மூன்று பேர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜே.என்.யு., பேராசிரியர்கள் அமீத் பரமேஸ்வரன், அதுல் சூத், சுக்லா விநாயக் சாவந்த் ஆகியோர் டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பாதுகாக்க வேண்டும்அந்த மனுவில், 'ஜே.என்.யு., பல்கலை வன்முறைக்கு தொடர்பான ஆதாரங்களை மீட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

'பல்கலை.,யில் வன்முறை நடந்த போது பதிவாகி இருந்த அனைத்து 'சிசிடிவி' காட்சிகளையும் மீட்க, டில்லி காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்நிலையில், பல்கலை வகுப்புகள், ஜன., 13 முதல் துவங்கும் என்றும், மனிதவள அமைசக்கத்தின் முடிவின் படி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் மாற்றமின்றி முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும், ஜே.என்.யு., துணைவேந்தர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜே.என்.யு., வன்முறையில் தொடர்புடையதாக கருதப்படும், ஒன்பது பேரின் படங்களை, டில்லி போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதில் ஒருவராக, மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ் இடம் பெற்றுள்ளார். மறுப்புகடந்த, 5ம் தேதி, மாணவர் விடுதியில் சில குறிப்பிட்ட அறைகள் மட்டும் குறி வைத்து தாக்கப்பட்டதாகவும், ஆயிஷே கோஷ் உள்ளிட்ட பலர், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில், ஆயிஷே கோஷும் காயமடைந்து, சிகிச்சை பெற்றார். அவர், டில்லி போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X