சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆந்திர முதல்வர் கோர்ட்டில் ஆஜர்

Added : ஜன 10, 2020
Advertisement
 சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆந்திர முதல்வர் கோர்ட்டில் ஆஜர்

ஹைதராபாத்: சொத்து குவிப்பு வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான, ஜெகன்மோகன் ரெட்டி ஆஜரானார்.

ஆந்திர பிரதேசத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஜெகனுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் இருந்து, விலக்கு அளிக்க கோரி, அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்காக, ஜெகன்மோகன் ரெட்டி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் சேர்ந்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பிருமான, விஜய்சாய் ரெட்டியும் ஆஜரானார்.ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராக, 2004 முதல், 2009 வரை இருந்த காலகட்டத்தில், ஜெகன்மோகன் ரெட்டியின் பல்வேறு நிறுவனங்களில், முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த புகாரின் படி, இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு, மே, 2012 முதல், செப்., 2013 வரை சிறையில் அடைக்கப்பட்டநிலையில், தற்போது ஜாமினில் உள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X