பொது செய்தி

இந்தியா

ராணுவ விவகார துறை 37 செயலர்கள் நியமனம்

Added : ஜன 10, 2020
Advertisement

புதுடில்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தலைமை வகிக்கும், ராணுவ விவகாரங்கள் துறையில், 37 செயலர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு, முப்படைகளுக்கும் சேர்த்து, தலைமை தளபதி பதவி ஒன்றை உருவாக்கி, பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர், 31ல் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி பிபின் ராவத், இந்தாண்டு, ஜனவரி, 1ல் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்றார்.

அதன் பின், ராணுவ அமைச்சகத்தின் கீழ், ராணுவ விவகாரங்களுக்கான துறை, உருவாக்கப்பட்டது. அத்துறைக்கு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு, ராணுவ விவகாரங்களுக்கான துறையில் அதிகாரிகளை நியமித்து, நேற்று அறிவிப்பு வெளியிட்டது.அதில், இரண்டு இணைச் செயலர்கள், 13 துணை செயலர்கள், 22 சார்பு செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், முப்படைகளின் தலைமை தளபதி, தன் பொறுப்புகளை செயலாற்ற உதவுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X