பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் சூழல் குறித்து துாதர்களிடம் விளக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement

ஜம்மு: காஷ்மீருக்கு வந்து உள்ள, 15 நாட்டு துாதர்களிடம், யூனியன் பிரதேச தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி., அங்கு நிலவும் சூழல் குறித்து விளக்கினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், மத்திய அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு, 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதிரடியாக அறிவித்தது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், 15 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், ஜம்மு - காஷ்மீருக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு நேற்று முன்தினம் வந்த அவர்கள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர்.பின், யூனியன் பிரதேச தலைமை செயலர் பி.வி.ஆர்.சுப்ரமணியன், டி.ஜி.பி., தில்பக் சிங் ஆகியோர், அங்கு நிலவும் சூழல் குறித்து, துாதர்களிடம் விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X