மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தின விடுமுறை உள்ள நிலையில், காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, வரும், 30ம் தேதியும் விடுமுறை விடுவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,200 கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம் உள்ளிட்ட, எட்டு நாட்களுக்கு, மதுக் கடைகளுக்கு விடுமுறை. வரும், 16ல், திருவள்ளுவர் தினம்; 26ல், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இதனால், அந்த இரு நாட்களுக்கும், மது கடைகள் மட்டுமின்றி, பார், கிளப்களிலும், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வரும், 30ம் தேதி, காந்தி நினைவு தினத்திற்கும், மதுக் கடைகளை மூடுவது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது.
மது விலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாடும் வேளையில், அவரின் பிறந்த நாளுக்கு, மதுக் கடைகளை மூடுவதுபோல், நினைவு நாளான, ஜனவரி, 30ல், விடுமுறை விட கோரி, 2019ல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, அந்த ஆண்டு, ஜனவரி, 30ல், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும், காந்தி நினைவு நாளுக்கு, மதுக் கடைகள் மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவை, அரசு அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE