பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடுகளை தடுக்க கட்டுப்பாடு: டி.என்.பி.எஸ்.சி., ஆலோசனை

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (3)
Advertisement
TNPSC,Exam,TamilNaduPublicServiceCommission

சென்னை: போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, 'நீட்' தேர்வு போன்று, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய, மாநில அரசு துறைகளில், காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுகளில், சமீப காலமாக பல்வேறு முறைகேடு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட, குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களின் மாணவர்கள் மட்டும், முன்னிலை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டுப்பாடுகள் போன்று, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கமிட்டி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, விரிவான ஆலோசனை நடந்து வருகிறது. எந்த வகையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்; தேர்வு மையங்கள் மற்றும் கண்காணிப்பாளர் நியமனத்தில் செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
12-ஜன-202000:19:10 IST Report Abuse
oce தேர்வு நடக்க இருக்கும் சில விநாடி நெருக்கத்தில் கேள்விகள் தயாரிக்க வேண்டும். அவைகள் தேர்வு எழுதுபவர்களின் நேரடி பார்வைக்கு கிடைக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கேள்வி தாள்களை அறைகளில் பூட்டி வைப்பதால் இத்தகைய முறை கேடுகள் நடக்கின்றன. தேர்வு ஹாலில் தேர்வு எழுதுபவர்களுக்கு எதிரே பெரிய (அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியில் சேரும் மாணவர்களுக்கு செய்திகளை காட்டும் பெரிய திரைகள்அளவுக்கு) திரைகளில் கேள்விகளை திரையிட்டு காட்ட வேண்டும். மாணவர்கள் அதை பார்த்து விடைகளை எழுத வேண்டும். முறை கேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜன-202022:09:01 IST Report Abuse
Sampath Kumar தும்பை விட்டு வாலை பிடிப்பது தானே நம்ப வழக்கம்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஜன-202014:40:42 IST Report Abuse
Natarajan Ramanathan ஆந்திராவில் கீதம் யூனிவர்சிடியில் கேள்விதாள்களை வங்கிலாக்கரில் வைத்து பரீட்சையன்று காலை வந்து வாங்கிச் சென்று மதியம் தேர்வு நடத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X