பொது செய்தி

தமிழ்நாடு

1,028 கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு பிப்.,3ல் தேர்தல்

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: தமிழகத்தில், 1,028 கூட்டுறவு சங்கங்களில், காலியாக உள்ள, 11 ஆயிரத்து, 368 இடங்களுக்கு, பிப்ரவரி, 3ல் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட, 505 தொடக்க பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், ஐந்தாண்டுகள் பதவி நிறைவுறும், 517 தொடக்க பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, நான்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள்; இரண்டு மாவட்ட கூட்டுறவு அச்சகங்கள் என, மொத்தம், 1,028 கூட்டுறவு சங்கங்களுக்கு, தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்த சங்கங்களில், 11 ஆயிரத்து, 368 நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்ய, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம், தேர்தலை அறிவித்துள்ளது.நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியில், 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2,068 இடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இப்பதவிகளுக்கு, வரும், 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கும். மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

மனுவை திரும்ப பெற விரும்புவோர், 29ம் தேதி மாலை, 4:00 மணிக்குள், வாபஸ் பெறலாம். இறுதி பட்டியல், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படும். போட்டி இருந்தால், பிப்., 3ல் ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, பிப்., 4ல் நடக்கும். நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின், பிப்ரவரி, 8ல், சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X