அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர்களை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்:

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர்களை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்:

சென்னை: 'மாணவிக்கு, பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தர்மபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலை பள்ளியில், இரு ஆசிரியர்கள், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. மாணவியருக்கு, கல்வியும் ஒழுக்கமும் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டிருப்பது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும், இந்த தீயச் செயல்களுக்கு, உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியின் அத்துமீறல், ஒரு மாணவியிடம் மட்டும் தான் அரங்கேற்றப் பட்டிருக்கிறதா அல்லது வேறு எவரேனும், இவர்களின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். இரு ஆசிரியர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியரையும், உடனே, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அவர்கள் மீது, 'போக்சோ' சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசின் சார்பில் நிதி உதவி வழங்கி, தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-ஜன-202020:29:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இன்று கிராமங்களில் நல்ல ஆசிரியர்களை இப்படி பொய்ப்பழி போட்டு துரத்துவது கிரிமினல் புத்தியுள்ள வர்கள் வேலையாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X