பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடி செலுத்த 'வீ கேர்' நிறுவனத்திற்கு கெடு

Added : ஜன 10, 2020
Advertisement

சோதனை முடிந்த நிலையில், 'வீ கேர்' நிறுவனம், ஒரு வாரத்திற்குள், கூடுதலாக, ஒரு கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என, வணிக வரித்துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், 'பிரபாஸ் வீ கேர் ஹெல்த் கிளினிக்' குழுமத்தில், இம்மாதம், 7ம் தேதி முதல் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி உட்பட, ஏழு நகரங்களில், 100 அதிகாரிகள் நடத்திய சோதனை, நேற்று முன்தினம் இரவு முடிந்தது. இந்நிலையில், நிலுவை வரியில் குறிப்பிட்ட தொகையை செலுத்த, வீ கேர் நிறுவனம் சம்மதித்துள்ளது. இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., முறைகேடு தொடர்பாக, வீ கேர் குழுமத்தின், 33 கிளைகளில், மூன்று நாட்களாக சோதனை நடந்தது. சோதனையில், ஜி.எஸ்.டி., செலுத்தாமல், பல கோடி ரூபாய் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, முதற்கட்டமாக, ஒரு கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆய்வு செய்த பின், செலுத்த வேண்டிய வரித்தொகை குறித்த, தெளிவான விபரம் தெரிய வரும். இந்தப்பணி முடிய, சில மாதங்களாகும். இந்நிலையில், நிலுவை வரியில், மேலும், ஒரு கோடி ரூபாயை செலுத்த, வீ கேர் நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த தொகையை, ஒரு வாரத்தில் செலுத்த, கெடு விதிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X