சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தர்பார்' இயக்குனருக்கு மிரட்டல்

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள, 'தர்பார்' பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதால், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர், முத்து ரமேஷ்; தமிழ்நாடு நாடார் சங்க தலைவர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்தில், போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ள ரஜினி, 'ஜெயிலுக்குள் செல்போனா' என, கேள்வி எழுப்புகிறார். அதற்கு, மற்றொரு அதிகாரியாக நடித்துள்ளவர், 'காசு இருந்தால், ஜெயிலுக்குள் இருப்பவர்கள் ஷாப்பிங் கூட செல்லலாம்' என, வசனம் பேசுவது இடம் பெற்றுள்ளது.இந்த வசனம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவை சீண்டுவது போல இருப்பதாக, மர்ம நபர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மேலும், அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில், விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஏ.ஆர். முருகதாசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X