பொது செய்தி

தமிழ்நாடு

வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய், நிவாரண உதவி வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், 8ம் தேதி இரவு, 8:00 மணி அளவில், களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்தார்.இரவு, 9:30க்கு, அங்கு வந்த இரண்டு பேர், கைத்துப்பாக்கியால், அவரை சுட்டனர். பின், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த, அவர் இறந்தார்.

இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், குடும்பத்தில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்படும் என, நேற்று முன்தினம் அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, நேற்று வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய், நிவாரண உதவி வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X