அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்று புகழ்ச்சிகள் நிறைந்த கவர்னர் உரை: ஸ்டாலின்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (20)
Advertisement
ஸ்டாலின், கவர்னர் உரை,சட்டசபை கூட்டம், வெளிநடப்பு, சி.ஆர்.பி.எப்.,

சென்னை: 'வெற்று புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும், திணித்துக் கொண்ட காகிதக் கட்டாக, கவர்னர் உரை இருந்த காரணத்தால் தான் வெளிநடப்பு செய்தோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:கவர்னர் உரையுடன் துவங்கிய, இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம், ஏதோ சடங்குக்காக கூடினோம்; கலைந்தோம் என, முடிவடைந்திருக்கிறது. மாநில மக்களின் நலன்களை காக்கவும், உரிமைகளை மீட்கவும், ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொண்டு, அதற்கேற்ப சட்டங்களையும், திட்டங்களையும் வகுக்க வேண்டிய சட்ட சபையை, ஆளும் தரப்பினரின் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திடும் போக்கே தொடர்கிறது.கவர்னர் உரை என்பது, ஆட்சியாளர்களின் குரல் ஒலியே தவிர, அது, இந்த ஆட்சியை பற்றிய, கவர்னரின் மதிப்பீடல்ல.

ஆட்சியாளர்களின் குரல் என்பது, தாங்கள் ஆளுகிற மாநிலத்தின் நலன் சார்ந்து இருக்க வேண்டும். ஆனால், வெற்று புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் திணித்துக் கொண்ட காகிதக் கட்டாக, கவர்னர் உரை இருந்த காரணத்தால் தான், வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:கடந்த பல ஆண்டுகளாக, எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஒவ்வொருவருக்கும், என் இதயப்பூர்வமான நன்றி. மதத்தின் பெயரால், வன்முறையில் ஈடுபடுவோரிடம் இருந்து, பல்கலை கழகங்களையும், மாணவர்களையும் பாதுகாக்க, சி.ஆர்.பி.எப்., வீரர்களை பயன்படுத்த வேண்டும் என, அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஜன-202003:35:27 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி ,-உனக்கு என்ன தான்யா வேணும்?ஆளுநர் ஏன் ஏழு பேரை 'விடுதலை' செய்யலேன்னு சொல்லனும்னரியா?
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
12-ஜன-202000:03:29 IST Report Abuse
oce வெளி நட்புசெய்தால் கவரனர் உரை பொய்யாகி விடுமா. அல்லது திமுகவினர் தமது உரையை கேட்டால் வெளியே போய்விடுவார்கள் என்று கவர்னர் பயப்பட்டு உரையை வாசிக்காமல் மூடி வைக்க வேண்டுமா. அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் சீட்டை விட்டு எழுந்து வெளியே போனால் அதன் காரணத்தை பதிவேட்டில் எழுதி வைத்து விட்டு வெளியே போக வேண்டும். அதன் படி சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டின் பணியாளர்களே. சட்டம்ன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்யும் அத்தனை திமுக எம்எல்ஏக்களும் அங்குள்ள பதிவேடுகளில் வெளியே போகும் காரணத்தை பதிவு செய்த பின் போனார்களா. இல்லை என்றால் டெரிலிக்ஷன் ஆப் டூட்டி என்ற குற்றத்தின் அடிப்படையில் அவர்களை தற்காலிக பதவி நீக்கம் செய்யலாம். அப்படி செய்தால் எவரும் சட்டமன்ற நேரத்தில் தான் தோன்றி தனமாக வெளியே போக முடியாது.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-ஜன-202023:50:44 IST Report Abuse
oce எவரும் எருதை கேட்டு கொட்டாய் க்ட்ட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X