பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களுக்கு தேர்தல் எப்போது?: ஆணையம் ஆலோசனை

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, ஒன்பது மாவட்டங்களில், வார்டுகள் மறுவரையறை செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டுகள் மறுவரையறை பணிகளை முடித்து, இம்மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, ஒரு மாதம் முடிந்துள்ளது; இன்னும், இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே, வார்டுகள் வரையறை ஆணையத்தின் கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், நேற்று நடந்தது.

வார்டுகள் வரையறை ஆணையத்தின் தலைவராக உள்ள, மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகள் இயக்குனர் எஸ்.பழனிசாமி மற்றும் வார்டு வரையறை ஆணைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில், ஊராட்சி தேர்தல் நடக்காத ஒன்பது மாவட்டங்களில், மாவட்ட குழு தலைவர், துணை தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, எவ்வாறு இடஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. வார்டுகள் வரையறை பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X