பொது செய்தி

தமிழ்நாடு

1.30 கோடி பேருக்கு பொங்கல் பரிசு

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: ரேஷன் கடைகளில், நேற்று மாலை வரை, 1.௩0 கோடி அரிசி கார்டு களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இரண்டு கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும், முன்கூட்டியே வாங்கி, குறிப்பிட்ட எடையில் பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பின. இதனால், கடை ஊழியர்கள், அவற்றை விரைவாக வழங்க முடிகிறது. மேலும், 500 ரூபாய் நோட்டுகளும் புதிதாக இருப்பதால், இரண்டாக தருவதிலும் சிரமம் ஏற்படவில்லை.

இதனால், கடைகளில், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, தினமும், 300 - 400 கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தாலும், பிரச்னை இல்லாதபட்சத்தில், அதை விட அதிக அளவு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு, நாளை மறுநாள் வரை வழங்கப்பட உள்ள நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, 1.௩0 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, அவை வழங்கப்பட்டு உள்ள தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X