பொது செய்தி

தமிழ்நாடு

வானிலையில் மாற்றம் பனி மூட்டம் அதிகரிப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: வானிலை மாற்றம் காரணமாக, பல இடங்களில் பனி மூட்டமும், சில இடங்களில் காற்று மாசும் அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வட கிழக்கு பருவ மழை, 2019 அக்., 16ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. இந்த ஆண்டு, 87 நாட்கள் பருவ மழை நீடித்து, 102 சதவீதம் மழையை கொடுத்துள்ளது.இதையடுத்து, நேற்று காலை முதல், பனிக்காலம் துவங்கியது. அதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பனி மூட்டம் அதிகரித்தது. இரவு முதல், அதிகாலை வரை, பனி மூட்டமும், சில இடங்களில், லேசான பனிப் பொழிவும் காணப்பட்டது.பெரும்பாலான இடங்களில், இயல்பான வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. மலைப் பகுதிகளில் வெப்பநிலை குறைந்து, கடும் குளிர் அடிக்கிறது. கடலோர பகுதிகளில், காலையில் துவங்கும் வெப்பநிலை, இயல்பான நிலையை விட, 3 டிகிரி செல்ஷியஸ் குறைந்துள்ளது.

இந்நிலையில், வெப்பநிலை குறைவு மற்றும் பனி காரணமாக, வானிலையிலும், சுற்றுச்சூழலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கோவை மற்றும் திருச்சி விமான நிலைய பகுதியில், காலையில் பனி மூட்டம் காணப்பட்டது. சேலம், வேலுார் ஆகிய இடங்களில், காற்றில் மாசுக்கள் அதிகரித்து, புகை மூட்டமாக காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, எந்த இடத்திலும், 1 செ.மீ., அளவுக்கு கூட மழை இல்லை. இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலை நிலவும். தென் மாவட்டங்களில், நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X