சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறு ஓட்டு எண்ணிக்கை கோரிய மனுக்கள் மீது, தேர்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த மாதம், ௨௭ மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது.இன்று நடக்கிறதுஅடுத்த கட்டமாக, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல், இன்று நடக்க உள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, முறைகேடுகள் நடந்ததாகவும், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ௫௦க்கும் மேற்பட்ட மனுக்கள், தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த, கடலுார் மாவட்டம், சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன் என்பவர், மனு தாக்கல் செய்தார். 13க்கு தள்ளிவைப்புஇம்மனுக்கள் அனைத்தும், நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தன.மறு ஓட்டு எண்ணிக்கை கோரி, வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது, எடுத்த நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரி என்பவர், மறைமுக தேர்தல் நடக்கும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தலை, 'வீடியோ' பதிவு செய்யவும் கோரி, மனு தாக்கல் செய்தார்.போதிய பாதுகாப்புமனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. மறைமுக தேர்தலுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து டி.ஜி.பி., அறிவுறுத்தி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்று, விசாரணையை, நீதிபதி முடித்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE