அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரஜினிக்கும் பொறுப்பு' சொல்கிறார் கமல்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (18)
Advertisement
kama,rajini,rajinikanth,kamalhaasan,ரஜினி,கமல்

சென்னை: ''தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பு, ரஜினிக்கும் உண்டு,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, அ.தி.மு.க., அமைச்சர்கள் மாறி மாறி பேசுகின்றனர். அவர்கள் இலக்கு, எதுவென்று தெரியும். அதை நோக்கி, அவர்களது வியாபாரம் நடக்க வேண்டும்; அதற்கான விஷயங்களை, சொல்லி வருகின்றனர்.அனைத்து தமிழர்களுக்கும் பங்கீடு இருக்க வேண்டும். உழைப்பு, வியர்வை, இயன்றவர்கள் செல்வத்தை முதலீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தை துாக்கி கொண்டு வந்து, இருக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்பது, அனைவரின் கடமை. அது, ரஜினிக்கும் பொருந்தும்.சட்டசபையில் வாக்குவாதம் நடக்கிறது என்பதை பிரதிபலிக்கும் வகையில், செயல்பாடு உள்ளது. சட்டசபையில், எந்த கட்சியையும், அவர்கள் பேச அனுமதிக்கவில்லை என்பது தான் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு, கமல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-202005:44:38 IST Report Abuse
k balakumaran தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளாமல் இருவரும் ஓய போவது இல்லை. தமிழன் தலைவிதி பிழைக்க வந்தவர்கள் எல்லோரும் ஆணி புடுங்குவதை சகித்து வாழ்வது.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-ஜன-202022:53:25 IST Report Abuse
oce கட்சி வைத்திருப்பவர்.கமல் அவர் தமிழகத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை யோசிக்காமல் கட்சி இல்லாத ரஜினியை முன்னேற்ற சொல்கிறார். இது எப்படி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
11-ஜன-202019:19:36 IST Report Abuse
bal என்னடா பொறுப்பை செஞ்சீங்க இதுவரை....கேளிக்கை பெயரில் ஊரை கொள்ளை அடித்து நீங்க சொத்து செய்தீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X