பொது செய்தி

தமிழ்நாடு

'இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை': இலங்கை முன்னாள் முதல்வர்

Added : ஜன 10, 2020
Advertisement
 'இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை': இலங்கை முன்னாள் முதல்வர்

வேலுார்: ''இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்,'' என, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கூறினார்.

வேலுாரில் அவர் கூறியதாவது: இந்தியா - இலங்கை இடையே, இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்த ஒப்பந்தம் இல்லை. இதனால், இரட்டை குடியுரிமை வழங்குவதில், சட்ட சிக்கல்கள் உள்ளன. இலங்கை தமிழர்கள் நலன் கருதி, மத்திய அரசு, இலங்கை அரசிடம் பேசி, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில், 10 லட்சம் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும், இலங்கைக்கு திரும்ப வேண்டும். தமிழர்கள், இலங்கைக்கு திரும்பினால் தான், அவர்களால் இழந்த உரிமைகளை பெற முடியும். மேலும், அங்கு தமிழர்கள் ஆட்சி அமைவதற்கும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில், தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை ஓரளவுக்கு தான் ஒப்படைத்து உள்ளனர். ராணுவத்தினர் வசமுள்ள, 65 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஒப்படைக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X